வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் 'சீன்': 1.7 மில்லியன் டாலரைக் கடந்து சூர்யா சாதனை!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அதிரடித் திரைப்படமான 'சீன்' வட அமெரிக்க திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இப்படம் இதுவரை 1.7 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலை (ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடிக்கும் மேல்) குவித்து புதிய சாதனை படைத்துள்ளதாக வட அமெரிக்க விநியோகஸ்தரான பிரைம் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸிலும் அபாரமான வசூல் ஈட்டி வருகிறது. சூர்யாவின் அனல் பறக்கும் நடிப்பு, திரைக்கதையின் விறுவிறுப்பு மற்றும் சுஷின் ஷியாமின் அதிரடியான பின்னணி இசை ஆகியவை வெளிநாட்டு வாழ் தமிழ் ரசிகர்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு வரவழைத்துள்ளது. குடும்ப ரசிகர்களும் இளைஞர்களும் கொண்டாடும் படமாக அமைந்துள்ள 'சீன்' திரைப்படம், வரும் வார இறுதி நாட்களிலும் கூடுதல் திரைகளில் திரையிடப்படவுள்ளது. இதன் மூலம் சூர்யாவின் திரை வரலாற்றில் அதிக வசூல் செய்த வெளிநாட்டுத் திரைப்படங்களின் பட்டியலில் 'சீன்' முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
· Primemediaus