புக்மைஷோவில் 15 லட்சம் டிக்கெட்டுகளைக் கடந்த சூர்யாவின் 'சீன்': பாக்ஸ் ஆபிஸில் அசுர வசூல் வேட்டை!

புக்மைஷோவில் 15 லட்சம் டிக்கெட்டுகளைக் கடந்த சூர்யாவின் 'சீன்': பாக்ஸ் ஆபிஸில் அசுர வசூல் வேட்டை!

நடிகர் சூர்யாவின் 'சீன்' திரைப்படம், புக்மைஷோ தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவாகி அசுர வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இத்தகவலை சினிமா செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் புக்மைஷோ செயலியில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 15 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள இப்படத்தின் சுவாரசியமான திரைக்கதையும், முன்னணி நட்சத்திரங்களின் இயல்பான நகைச்சுவை நடிப்பும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. சூர்யா மற்றும் நஸ்ரியாவின் நகைச்சுவை கலாட்டாக்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. திரையரங்குகளில் ரசிகர்கள் குடும்பத்தோடு வந்து படத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அனைத்து முக்கிய பிராந்தியங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றி நடைபோடும் 'சீன்', நடப்பு ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்