திரையரங்குகளில் சூர்யாவின் தீபாவளி கொண்டாட்டம்: வசூல் மழையில் நனையும் சீன்!

திரையரங்குகளில் சூர்யாவின் தீபாவளி கொண்டாட்டம்: வசூல் மழையில் நனையும் சீன்!

தீபாவளி பண்டிகை ரிலீஸாக திரையரங்குகளில் களம் இறங்கியுள்ள சூர்யாவின் சீன் (SCENE) திரைப்படம், ரசிகர்களுக்கு உண்மையான தீபாவளி விருந்தாக அமைந்து திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்து வருவதாக பிஆர்ஓ வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். தீபாவளி விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இப்படத்தின் விறுவிறுப்பான காட்சிகளையும் நகைச்சுவை கலந்த திரைக்கதையையும் கொண்டாடி வருகின்றனர். அனைத்து மையங்களிலும் திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிகின்றன. சூர்யாவின் திரைப்பயணத்தில் இந்த தீபாவளி வெளியீடு ஒரு மறக்க முடியாத வெற்றி கொண்டாட்டமாக மாறியுள்ளது. வரும் நாட்களிலும் வசூல் வேட்டை நீடிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்