சூர்யாவின் 'சீன்' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது: துள்ளலான 'ஆத்தி இவ யாரா' பாடல் வீடியோ இதோ!
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில், 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் 'சீன்' திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழில் 'ஆத்தி இவ யாரா' என்ற வரிகளுடன் உருவாகியுள்ள இப்பாடலை ராஜ்பிரியன் எழுதிப் பாடியுள்ளார். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இந்த துள்ளலான ட்ராக் இளைஞர்களை கவரும் வகையில் அட்டகாசமான பீட்களுடன் அமைந்துள்ளது. நஸ்லேன் மற்றும் நஸ்ரியா ஃபஹத் ஆகியோரின் காம்போவில் உருவாகும் இக்காட்சிகள் பாடலின் எனர்ஜியை மேலும் கூட்டியுள்ளன. தெலுங்கில் 'அம்மோ இதி எவர்ரா' என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்பாடலும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்து வருகிறது. ஜித்து மாதவனின் முந்தைய படங்கள் போல் இப்படமும் நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த இளைஞர்களின் கொண்டாட்டப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj