புக்மைஷோவில் 20 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: புதிய சாதனை படைத்த சூர்யாவின் சீன்!
சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீன் (SCENE) திரைப்படம், பிரபல டிக்கெட் முன்பதிவு தளமான புக்மைஷோவில் மட்டுமே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட (2M+) டிக்கெட் முன்பதிவுகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறை நாட்களில் வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இத்திரைப்படம், அடுத்தடுத்து பல புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. முன்பதிவு தொடங்கிய நாளிலிருந்தே டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருவது ரசிகர்களின் அசாத்தியமான வரவேற்பை தெளிவாக காட்டுகிறது. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், வார நாட்களிலும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் இந்த அதிரடி வெற்றி ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
· Ursvamsishekar