அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் சூர்யாவின் தொடர் சாதனை: 'கருப்பு' படத்தை தொடர்ந்து 'சீன்' படமும் 1 மில்லியன் டாலர் வசூல்!

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் சூர்யாவின் தொடர் சாதனை: 'கருப்பு' படத்தை தொடர்ந்து 'சீன்' படமும் 1 மில்லியன் டாலர் வசூல்!

நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள 'சீன்' (Scene) திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் வட அமெரிக்காவில் சூர்யா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒரு மில்லியன் டாலர் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ விநியோக நிறுவனமான பிரைம் மீடியா அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் வட அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்து அசத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 'சீன்' திரைப்படமும் அதே சாதனையை நிகழ்த்தி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க ரசிகர்களின் இந்த பேராதரவுக்கு விநியோகஸ்தர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். ஜித்து மாதவனின் நேர்த்தியான இயக்கம் மற்றும் சுஷின் ஷியாமின் விறுவிறுப்பான பின்னணி இசை ஆகியவை வெளிநாட்டு ரசிகர்களைத் தியேட்டருக்கு கவர்ந்திழுத்துள்ளது. விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வசூல் மேலும் புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Primemediaus

பழைய செய்திகள்