சூர்யாவின் சீன் படத்துக்கு கேரளாவில் மாஸ் ஓபனிங்: மூன்றே மணி நேரத்தில் ரூ.1.2 கோடி வசூல் வேட்டை!
சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகியுள்ள 'சீன்' திரைப்படத்தின் முன்பதிவு கேரளாவில் தொடங்கி அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாள ரிவியூ தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்பதிவு தொடங்கிய மூன்றே மணி நேரத்தில் சுமார் 1.2 கோடி ரூபாய் வசூலைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. கேரளாவில் சூர்யாவுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தற்போது அங்கு நிலவும் வரவேற்பைப் பார்க்கும்போது, சூர்யாவின் திரைப்பயணத்திலேயே கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக 'சீன்' இருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதால், முதல் நாள் வசூல் புதிய உச்சத்தை எட்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· MalayalamReview