சூர்யாவின் 'சீன்' பட முன்பதிவு வேகம்: காலை 6 மணி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அசுர வரவேற்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 அன்று திரைக்கு வரவுள்ள சூர்யாவின் 'சீன்' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட் விற்பனையில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் இன்னும் முழுமையாக முன்பதிவு தொடங்கப்படாத நிலையிலும், தற்போது வரை 16,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு அரசு காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, முன்னணி நகரங்களில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை காட்சிகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இணையதள முன்பதிவு தளங்கள் ரசிகர்களின் வருகையால் களைகட்டியுள்ளன. நஸ்ரியா பகத், நஸ்லென் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். தீபாவளிப் பண்டிகைக்கு தியேட்டர்களில் திருவிழாக் கொண்டாட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு, இந்த அதிரடி முன்பதிவு உற்சாகத்தை இருமடங்காக்கியுள்ளது.
· @_movietamil