'சீன்' படத்தில் சூர்யா பார்வையற்ற போலீஸா?: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எழுத்தாளர் திராவிட் செல்வம்!

'சீன்' படத்தில் சூர்யா பார்வையற்ற போலீஸா?: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எழுத்தாளர் திராவிட் செல்வம்!

ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில், சூர்யா பார்வையற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவல் முற்றிலும் உண்மையில்லை என அப்படத்தின் எழுத்தாளரும் நடிகருமான திராவிட் செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். 'ரோமாஞ்சம்', 'ஆவேசம்' புகழ் ஜித்து மாதவன் இயக்கும் 'சீன்' (Scene) திரைப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து இணையத்தில் பல சுவாரசியமான யூகங்கள் கிளம்பின. அதில் சூர்யா கண்பார்வை அற்ற காக்கியாக நடிக்கிறார் என்ற வதந்தி வேகமாக பரவியது. ஆனால், இது முழுக்க கற்பனையான தகவல் என்றும், படத்தின் உண்மைக் கதையும் சூர்யாவின் கதாப்பாத்திரமும் முற்றிலும் வேறானது என்றும் திராவிட் செல்வம் பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். ஜகரம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா மற்றும் ஜித்து மாதவன் கூட்டணி ஏற்கனவே ரசிகர்களிடையே உச்சக்கட்ட ஆவலை கிளப்பியுள்ளது.

· Only Kollywood

பழைய செய்திகள்