'யு/ஏ' சான்றிதழுடன் முடிந்தது தணிக்கை: சூர்யாவின் 'சீன்' பட ரன்டைம் விவரம் இதோ!
சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் திரையிடல் நேரம் 2 மணி நேரம் 29 நிமிடங்கள் என தணிக்கைக் குழுவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. விறுவிறுப்பான ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரன்டைம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகப் படம் பார்த்தவர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. சூர்யாவின் அதிரடி நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை படம் முழுவதும் ரசிகர்களைக் கட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளதால், ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.
· @_movietamil