கேரளாவில் சூர்யாவின் சீன் படம் 30 கோடி வசூல் சாதனை: பாக்ஸ் ஆபிஸில் தொடரும் வெற்றி நடை!

கேரளாவில் சூர்யாவின் சீன் படம் 30 கோடி வசூல் சாதனை: பாக்ஸ் ஆபிஸில் தொடரும் வெற்றி நடை!

ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நஸ்லென், நஸ்ரியா நசீம் இணைந்து நடித்துள்ள சீன் (SCENE) திரைப்படம், கேரளாவில் 30 கோடி ரூபாய் மொத்த வசூலைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதனை மலையாளம் ரிவ்யூ தளம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. கேரளாவில் சூர்யாவிற்கு எப்போதுமே தனிப்பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், ரோமஞ்சம், ஆவேசம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவனுடன் சூர்யா கைகோர்த்தது படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்தது. நஸ்லென் மற்றும் நஸ்ரியாவின் கலகலப்பான நடிப்பும், அதிரடி நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான திரைக்கதையும் குடும்ப ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு மீண்டும் மீண்டும் வரவழைத்துள்ளது. உலக அளவில் ஏற்கெனவே 200 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி நடை போடும் சீன் திரைப்படம், தற்போது கேரளாவிலும் 30 கோடி வசூல் சாதனையை எட்டி சூர்யாவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத வெற்றியாக உருவெடுத்துள்ளது.

· MalayalamReview

பழைய செய்திகள்