சூர்யாவின் சீன் பட இறுதி மிக்ஸிங் பணிகள் நிறைவு: நவம்பர் 6 தீபாவளி ரிலீசுக்கு தயார்!
நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள சீன் திரைப்படத்தின் இறுதி ஒலி கலவை (Final Mixing) பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தகவல் சூர்யாவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆவேசம் பட புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் ஜோதிகா, நஸ்ரியா நசீம், நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாமின் துள்ளலான இசை மற்றும் விஷ்ணு கோவிந்தின் சவுண்ட் டிசைன் பணிகளுடன் உருவாகியுள்ள இப்படம் தியேட்டர்களில் ரசிகர்களுக்கு மிரட்டலான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தொழில்நுட்ப பணிகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் அதிகாலை 6 மணி முதல் சீன் திரைப்படம் பிரம்மாண்டமாக திரைக்கு வருகிறது.
· @_movietamil