கொச்சியில் இன்று அதிரும் சூர்யாவின் 'சீன்' பட பிரம்மாண்ட விழா: ஜோதிகா, நஸ்ரியாவுடன் களமிறங்கும் படக்குழு!

கொச்சியில் இன்று அதிரும் சூர்யாவின் 'சீன்' பட பிரம்மாண்ட விழா: ஜோதிகா, நஸ்ரியாவுடன் களமிறங்கும் படக்குழு!

தீபாவளிப் பண்டிகைக்கு திரைக்கு வரும் நடிகர் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட புரமோஷன் விழா 'சீன் லைவ் இன் கொச்சி' என்ற பெயரில் இன்று மாலை கொச்சியில் நடைபெறுகிறது. அங்ஙமாலி அட்லக்ஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் மாலை 7 மணிக்கு தொடங்கும் இந்த பிரம்மாண்ட விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர். இவ்விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஜித் மாதவன், நடிகைகள் ஜோதிகா மற்றும் நஸ்ரியா ஃபஹத், இளம் நடிகர் நஸ்லன் மற்றும் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் ஆகியோர் பங்கேற்கின்றனர். கேரளாவிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளதால் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. சுஷின் ஷியாமின் துள்ளலான இசை நிகழ்ச்சியுடன் கூடிய இந்த கொண்டாட்ட நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படம் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

· Prosathish

பழைய செய்திகள்