கேரளாவில் சூர்யாவின் அசுர பலம்: 'சீன்' படத்தின் அட்வான்ஸ் புக்கிங் 3 கோடியை கடந்தது!
சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், கேரளாவில் இப்படத்தின் முன்பதிவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மட்டும் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை இப்படம் கடந்துள்ளதாக மலையாள சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கேரளாவில் சூர்யாவுக்கு எப்போதுமே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதிலும் 'ரோமஞ்சம்', 'ஆவேஷம்' ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளதும், நஸ்ரியா மற்றும் நஸ்லென் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதும் கேரள ரசிகர்களிடையே அபாரமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நாளை அதிகாலை முதலே கேரளாவின் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளதால், முதல் நாள் வசூலில் இப்படம் கேரளாவில் புதிய சாதனையை எட்டும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
· MalayalamReview