சீன் படத்தில் மாயாவாக நஸ்ரியா: தீபாவளி ஸ்பெஷல் கேரக்டர் க்ளிம்ப்ஸ் வெளியிட்ட ப்ரைம் மீடியா!

சீன் படத்தில் மாயாவாக நஸ்ரியா: தீபாவளி ஸ்பெஷல் கேரக்டர் க்ளிம்ப்ஸ் வெளியிட்ட ப்ரைம் மீடியா!

நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தில் இருந்து, நடிகை நஸ்ரியாவின் கதாபாத்திர அறிமுக க்ளிம்ப்ஸை அமெரிக்க விநியோகஸ்தரான ப்ரைம் மீடியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 'மாயா' என்ற க்யூட்டான கதாபாத்திரத்தில் நஸ்ரியா தோன்றும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நஸ்ரியா தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த படத்தில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற துடிப்பான போலீஸ் அதிகாரியாக வலம் வர, நஸ்ரியாவின் மாயா கதாபாத்திரம் திரைக்கதையில் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி 'சீன்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. நஸ்ரியாவின் புதிய லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாகத் தொடங்கி வருகின்றன.

· Primemediaus

பழைய செய்திகள்