சூர்யாவின் 'சீன்': போலீஸ் vs சீரியல் கில்லர் மோதல்! சுவாரசிய பின்னணி தகவல்
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சீன்' (SCENE) திரைப்படத்தின் மையக்கரு குறித்த விறுவிறுப்பான தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கசிந்துள்ளது. அதன்படி, இத்திரைப்படம் ஒரு நேர்மையான காவல் அதிகாரிக்கும் கொடூரமான சீரியல் கில்லருக்கும் இடையிலான அதிரடி மோதலாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாகவும், மலையாள இளம் நடிகர் நஸ்லென் சைக்கோ சீரியல் கில்லராகவும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2D என்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தில் நஸ்ரியா நசீம், ஜோதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 அன்று திரைக்கு வரும் 'சீன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த அதிரடித் தகவல் சினிமா ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது.
· @_movietamil