இன்னும் 3 நாட்களில் சூர்யாவின் தீபாவளி 'சீன்': உலகம் முழுவதும் நவம்பர் 6 அன்று அதிரடி ரிலீஸ்!
நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'சீன்' திரைப்படம் தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் நினைவூட்டியுள்ளனர். ரோமன்சம் மற்றும் ஆவேஷம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் இணைந்து நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. கலகலப்பான நகைச்சுவை மற்றும் அதிரடி ஆக்ஷன் கலந்த குடும்பத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களுக்கு முழுமையான எண்டர்டெயின்மென்ட் நிச்சயம் என படக்குழு உறுதி அளித்துள்ளது. வரும் நவம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்தோடு திரையரங்குகளில் கொண்டாடும் சிறந்த விருந்தாக இப்படம் அமையும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
· Actor Kayal Devaraj