சூர்யாவின் 'சீன்' படத்தின் சுவாரசியமான கதைக்களம் கசிந்தது: விநோத குழுவுடன் களமிறங்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி!

சூர்யாவின் 'சீன்' படத்தின் சுவாரசியமான கதைக்களம் கசிந்தது: விநோத குழுவுடன் களமிறங்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி!

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சீன்' (Scene) திரைப்படத்தின் ஒன்லைன் கதைக்களம் குறித்த சுவாரசியமான விவரங்கள் வெளியாகி சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை எகிற வைத்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ சுருக்கத்தை மூவி தமிழ் தளம் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. காவல்துறையில் இருந்து வெளியேறிய ஒரு முன்னாள் அதிகாரி, பழைய வழக்கு ஒன்றை மீண்டும் ரகசியமாக விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவருக்கு உதவ அதிகாரப்பூர்வ போலீஸ் குழு இல்லாததால், தானே ஒரு குழுவை உருவாக்குகிறார். ஆனால், அதில் இணையும் நபர்கள் யாருமே இயல்பானவர்களாக இல்லாமல் விநோதமான குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் வாழ்வதும், அந்த வழக்கை விசாரிப்பதும் பெரும் சவாலாக மாறுகிறது. அதே நேரத்தில், மற்றொரு நேர்த்தியான எதிரணி அதே வழக்கை விசாரிக்கிறது. இந்த விசித்திரமான குழுவின் கூத்துகளும், அவர்கள் சந்திக்கும் நகைச்சுவை சம்பவங்களுமே படத்தின் பிரதான கதையாகும். வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யாவின் நகைச்சுவை அலப்பறைகளும், ஒரு புதுவிதமான புலனாய்வுக் கதையும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஜித்து மாதவனின் முந்தைய படங்களைப் போன்றே இப்படமும் முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்