வட அமெரிக்காவில் 600க்கும் மேற்பட்ட திரைகளில் சூர்யாவின் சீன்: பிரைம் மீடியா பிரம்மாண்ட வெளியீடு

வட அமெரிக்காவில் 600க்கும் மேற்பட்ட திரைகளில் சூர்யாவின் சீன்: பிரைம் மீடியா பிரம்மாண்ட வெளியீடு

நடிகர் சூர்யா மற்றும் நஸ்ரியா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் வட அமெரிக்காவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிகபட்சமாக 600க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக விநியோக நிறுவனமான பிரைம் மீடியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள திரையரங்குகளின் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதுடன், டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படத்தின் மீது வெளிநாட்டு வாழ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வெளிநாடுகளில் சூர்யா படங்களுக்கு இருக்கும் பலமான வர்த்தகத்தைக் காட்டும் வகையில் இத்திரைப்படம் மிகப்பெரிய தொடக்கத்தைப் பெறும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

· Primemediaus

பழைய செய்திகள்