தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பும் சூர்யாவின் சீன் டிரெய்லர்: நவம்பர் 6ல் உலகம் முழுவதும் பிரம்மாண்ட ரிலீஸ்!

தெலுங்கிலும் பட்டையைக் கிளப்பும் சூர்யாவின் சீன் டிரெய்லர்: நவம்பர் 6ல் உலகம் முழுவதும் பிரம்மாண்ட ரிலீஸ்!

நடிகர் சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கியுள்ள சீன் திரைப்படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் என்விஆர் சினிமாஸ் வெளியிடும் இந்த படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வருவதாக பிஆர்ஓ வம்சி சேகர் தெரிவித்துள்ளார். தெலுங்கு ரசிகர்களிடமும் தனக்கென பெரும் வரவேற்பைக் கொண்டுள்ள சூர்யா, இந்த படத்தில் முழுநீள அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த புதுவித தோற்றத்தில் அசத்தியுள்ளார். நஸ்ரியா நசீமின் எதார்த்தமான நடிப்பு, வேகமான திரைக்கதை மற்றும் அனல் பறக்கும் பின்னணி இசை ஆகியவை டிரெய்லரின் முக்கிய சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன. வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக சீன் வெளியாகிறது. இரு மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு டிரெய்லரின் வெற்றி படத்தின் மீதான ஆவலை மேலும் எகிற வைத்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்