அதிகாரப்பூர்வமாக வெளியானது சூர்யாவின் ‘கங்குவா’ டைட்டில் லுக்: பிரம்மாண்ட வீடியோவை பகிர்ந்த நடிகர்!

அதிகாரப்பூர்வமாக வெளியானது சூர்யாவின் ‘கங்குவா’ டைட்டில் லுக்: பிரம்மாண்ட வீடியோவை பகிர்ந்த நடிகர்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் வரலாற்று திரைப்படத்திற்கு ‘கங்குவா’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ தலைப்பு முன்னோட்டத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். இயக்குனர் சிவா மற்றும் படக்குழுவினருடன் இணைந்து இந்த பிரம்மாண்ட கதையில் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக சூர்யா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்ய, சுப்ரீம் சுந்தர் சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். வெளியான தலைப்பு வீடியோவில் உள்ள பிரம்மாண்ட காட்சிகளும் சூர்யாவின் கம்பீரமான குரலும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இந்திய அளவில் பேசப்படும் முக்கிய படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Suriya_offl

பழைய செய்திகள்