அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சூர்யாவின் 'ஜெய் பீம்' சிறப்புத் திரையிடல்: அக்டோபர் 20-ல் கருத்தரங்கு!

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சூர்யாவின் 'ஜெய் பீம்' சிறப்புத் திரையிடல்: அக்டோபர் 20-ல் கருத்தரங்கு!

நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்ற 'ஜெய் பீம்' திரைப்படம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஹோசே மாநிலப் பல்கலைக்கழகத்தில் (SJSU) அக்டோபர் 20 அன்று சிறப்புத் திரையிடப்பட உள்ளது. இந்த தகவலை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் ஸ்டூடண்ட் யூனியன் தியேட்டரில் பிற்பகல் 3:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை இந்தத் திரையிடலும், அதைத் தொடர்ந்து படம்பற்றிய ஆய்வுக் கருத்தரங்கும் நடைபெறவுள்ளது. இதில் சான் ஹோசே பல்கலைக்கழக பேராசிரியை ஷீபா தத்தா ஹசாரிகா, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் ஆதிகா சிங் உள்ளிட்டோர் பங்கேற்று படம் பேசும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி சர்வதேச கவனத்தை ஈர்த்த 'ஜெய் பீம்', வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய அரங்குகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவது தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

· Apifilms

பழைய செய்திகள்