'சீன்' படத்தில் 7-ஆம் அறிவு ரெஃபரன்ஸ் சூர்யாவின் யோசனைதான்: சுவாரசியம் பகிர்ந்த இயக்குனர் ஜித்து மாதவன்
திரையரங்குகளில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் 'சீன்' திரைப்படத்தில் சூர்யாவின் நகைச்சுவைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற '7-ஆம் அறிவு' மற்றும் 'சிங்கம்' பட ரெஃபரன்ஸ்கள் உருவான விதத்தை இயக்குனர் ஜித்து மாதவன் நேர்காணலில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். நேர்காணலில் பேசிய அவர், படத்தில் தனியாக நகைச்சுவை நடிகர் யாரும் இல்லை என்றும், கதாநாயகனான சூர்யா சாரே முழு நகைச்சுவையையும் கையாள வேண்டும் என்று தான் கூறியதாகவும் தெரிவித்தார். ஆரம்பத்தில் இதுபோன்ற முழுமையான காமெடி காட்சிகளில் இதுவரை நடித்ததில்லை என்று தயங்கிய சூர்யா, படப்பிடிப்பின் போது மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் காட்சிகளைச் செய்து முடித்ததாகக் கூறினார். மேலும், படத்தில் இடம்பெற்ற '7-ஆம் அறிவு' ரெஃபரன்ஸை சூர்யாவே விரும்பி பரிந்துரைத்ததாகவும், 'சிங்கம்' படத்தின் குறிப்பு தன்னுடைய திட்டம் என்றும் ஜித்து மாதவன் விளக்கியுள்ளார். தியேட்டரில் இந்த ரெஃபரன்ஸ் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் விசில் சத்தமும் கைதட்டலும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
· @_movietamil