எல்லைகளைக் கடந்த 'அயன்' மேஜிக்: சூர்யாவின் கிளாசிக் படத்தை வியந்த சர்வதேச விமர்சகர்!
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, தமன்னா நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற 'அயன்' திரைப்படத்தின் நேர்த்தியான திரைக்கதையை வெளிநாட்டுத் திரைப்பட விமர்சகர் மெலானி பாராட்டி யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளதை சப்டைட்டில் கலைஞர் ரேக்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுங்கத்துறை மற்றும் கடத்தல் உலகை மையமாகக் கொண்டு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவான அயன், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் விறுவிறுப்பான மேக்கிங்கிலும் தமிழ் சினிமாவின் சிறந்த வணிகத் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்படத்திற்கு ரேக்ஸ் அமைத்த துல்லியமான ஆங்கில சப்டைட்டில்கள் வெளிநாட்டுப் பார்வையாளர்களும் கதையின் ஆழத்தை எளிதாகப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் சூர்யாவின் திரைப்படங்கள் உலகெங்கிலும் உள்ள புதிய சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருவது தமிழ் சினிமாவின் தரத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது என ரசிகர்கள் பெருமிதத்துடன் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர்.
· Rekhshc