வாடிவாசல் டைட்டில் லுக்குக்கு குவிந்த வரவேற்பு: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சூர்யா

வாடிவாசல் டைட்டில் லுக்குக்கு குவிந்த வரவேற்பு: ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் அளித்த பேராதரவிற்கு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். சி.சு.செல்லப்பாவின் புகழ்பெற்ற 'வாடிவாசல்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜல்லிக்கட்டுக் காளையுடன் மல்லுக்கட்டும் களத்தில் சூர்யா களமிறங்கும் இந்த லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணையும் முதல் படம் என்பதால் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ஆவலுடன் கவனித்து வருகிறது. உண்மையான ஜல்லிக்கட்டு மாடுகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் வீடியோக்களும் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

· Suriya_offl

பழைய செய்திகள்