‘கங்குவா’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் சூர்யா: இயக்குனர் சிவா குழுவினருக்கு உருக்கமான நன்றி!

‘கங்குவா’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் சூர்யா: இயக்குனர் சிவா குழுவினருக்கு உருக்கமான நன்றி!

நடிகர் சூர்யா தனது பிரம்மாண்ட திரைப்படமான ‘கங்குவா’ படத்தின் தனது இறுதி படப்பிடிப்புக் காட்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். முழு படக்குழுவும் நேர்மறை சிந்தனையுடன் உழைத்ததாகவும், இது ஒரு நிறைவின் முடிவும் பல புதிய தொடக்கங்களின் ஆரம்பமும் ஆகும் என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனர் சிவா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், இப்படத்தில் பணியாற்றிய நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். பிரம்மாண்ட காட்சிகளுடன் உருவாகும் இப்படத்தை திரையில் ரசிகர்கள் காணும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாக சூர்யா தெரிவித்தது ரசிகர்களிடையே உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது.

· Suriya_offl

பழைய செய்திகள்