"சூர்யா சாருடன் தமிழ் அறிமுகம் மகிழ்ச்சி": சீன் இசை அமைப்பாளர் சுஷின் சியாம் பேட்டி!

"சூர்யா சாருடன் தமிழ் அறிமுகம் மகிழ்ச்சி": சீன் இசை அமைப்பாளர் சுஷின் சியாம் பேட்டி!

மலையாள திரையுலகில் தொடர் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இளம் மேதை சுஷின் சியாம், சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்வில் பேசிய அவர், நடிகர் சூர்யா சாருடன் முதல் தமிழ் படத்தில் பணியாற்றுவது எனக்கு மிகப்பெரிய பெருமை அளிக்கிறது. முழு படத்தையும் நேரில் பார்த்து அனைத்து பின்னணி இசைப் பணிகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளோம். படம் மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் வந்துள்ளது என்று உற்சாகத்தோடு தெரிவித்தார். தமிழ் ரசிகர்கள் தன் இசையைக் கொண்டாடுவார்கள் என நம்புவதாகக் கூறினார். துள்ளலான பாடல்களுக்கும் விறுவிறுப்பான பின்னணி இசைக்கும் பெயர் பெற்ற சுஷின் சியாமின் இசை, 'சீன்' படத்திற்கு திரையரங்குகளில் பெரும் பலமாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 6 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்