ஸ்வயம்பு படத்தில் துணிச்சலான போராளி பூமியாக சம்யுக்தா: பிறந்தநாள் சிறப்பு வீடியோ க்ளிம்ப்ஸ் வெளியீடு!
நடிகை சம்யுக்தா மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் பிரம்மாண்ட வரலாற்றுப் படமான ‘ஸ்வயம்பு’ குழுவினர் சிறப்பு வீடியோ க்ளிம்ப்ஸ் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், தீவிர வாள்வீச்சு பயிற்சிகள் பெற்று துணிச்சல் மிக்க பெண் போராளி 'பூமி' கதாபாத்திரத்தில் சம்யுக்தா களம் இறங்குகிறார். இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கும் இந்த வரலாற்றுப் போர்க்களக் கதையில் நபா நடேஷ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கேஜிஎஃப் புகழ் ரவி பஸ்ரூர் பின்னணி இசை அமைக்க, செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சம்யுக்தாவின் ஆக்ஷன் அவதாரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பான் இந்தியா தளத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
· Idiamondbabu