71-வது தேசிய திரைப்பட விருதுகள்: 'அனிமல்' படத்திற்காக சின்க் சினிமா நிறுவனத்திற்கு விருது!
இந்தியத் திரையுலகின் மிக உயரிய கவுரவமான 71-வது தேசிய திரைப்பட விருதுகளில், ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படத்திற்காக சின்க் சினிமா குழு சிறந்த ஒலி வடிவமைப்பு விருதை வென்றுள்ளது. இந்த பெருமைமிகு தகவலை சின்க் சினிமா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெருமகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இந்த அதிரடித் திரைப்படத்திற்கு சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் தலைமையிலான சின்க் சினிமா குழுவினர் மிக நுணுக்கமான ஒலி அமைப்பை வழங்கியிருந்தனர். படத்தின் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெற்ற ரீ-ரெக்கார்டிங் மிக்ஸிங் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதற்கு தேசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் தொடங்கி தற்போது இந்திய அளவில் சாதனைகளைப் படைத்து வரும் சின்க் சினிமா குழுவினருக்கு சினிமா பிரபலங்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் இந்த வெற்றி தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனுக்கு பெருமை சேர்த்துள்ளது.
· Synccinema