நாகார்ஜுனாவின் கிங் 100 படத்தில் தபு: பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியீடு

நாகார்ஜுனாவின் கிங் 100 படத்தில் தபு: பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியீடு

இந்தியத் திரையுலகின் மூத்த முன்னணி நடிகையான தபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் புதிய படத்தின் சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமான கிங் 100 திரைப்படத்தில் மகந்தி ஜான்சி ராணி என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் தபு நடிக்கிறார். நின்னே பெல்லாடுதா போன்ற எவர்கிரீன் வெற்றிக்குப் பிறகு நாகார்ஜுனா மற்றும் தபு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஆர்.கார்த்திக் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் களத்தில் உருவாகும் கிங் 100 திரைப்படம் வரும் டிசம்பர் 24, 2026 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தபுவின் மிரட்டலான தோற்றம் இணையத்தில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்