குணச்சித்திர நடிகர் எம். அமுதன் காலமானார்: தமிழ் திரையுலகினர் இரங்கல்!

குணச்சித்திர நடிகர் எம். அமுதன் காலமானார்: தமிழ் திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் எதார்த்தமான பாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்த குணச்சித்திர நடிகர் எம். அமுதன் அக்டோபர் 3 அன்று காலமானார். அவரது திடீர் மறைவு குறித்த தகவலை திரைப்பட மக்கள் தொடர்பாளர் மற்றும் நடிகர் காயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பல திரைப்படங்களில் சிறிய வேடங்களாக இருந்தாலும் தனது இயல்பான பேச்சு வழக்கும் உடல் மொழியாலும் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அமுதன். நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் தனது தனித்துவமான பங்களிப்பைத் தந்து வந்த இவர், சக திரைக் கலைஞர்களுடன் எப்போதும் பாசத்துடன் பழகக்கூடிய நல்ல மனிதராகத் திகழ்ந்தார். அவரது மறைவுச் செய்தி கேட்டு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் சினிமா ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்