தீபாவளி ஸ்பெஷல்: கவனம் ஈர்க்கும் 'ரூபினா' பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தீபாவளி ஸ்பெஷல்: கவனம் ஈர்க்கும் 'ரூபினா' பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குநர் தமிழ்செல்வன் இயக்கத்தில் ராஜா சிங் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் 'ரூபினா'. தீபாவளி திருநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. படத்தின் போஸ்டரில் கதாநாயகன் ராஜா சிங்கின் தோற்றம் புதுமையான கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நிறைவடைந்து வரும் நிலையில், விரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுமுகங்களின் கூட்டணியில் தயாராகும் 'ரூபினா' ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்