இன்று தொடங்கியது அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் 'தமிழ்ப் படம் 3' படப்பிடிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

இன்று தொடங்கியது அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் 'தமிழ்ப் படம் 3' படப்பிடிப்பு: ரசிகர்கள் உற்சாகம்!

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா கதாநாயகனாக நடிக்கும் 'தமிழ்ப் படம் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது என ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஸ்பூஃப் பாணி படங்களுக்கு பெயர் பெற்ற இந்த கூட்டணியின் வருகை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் சி.எஸ். அமுதன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தில் அத்துல்யா ரவி கதாநாயகியாக நடிக்கிறார். சசிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோர் இணைந்து ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். முந்தைய இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வெற்றிகண்ட நிலையில், 'தமிழ்ப் படம் 3' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

· Apifilms

பழைய செய்திகள்