"இந்தியத் திரையின் மாபெரும் காவியம்": 'ராமாயணா' படத்திற்கு 5 நட்சத்திர மதிப்பீடு!
இயக்குநர் நிதேஷ் திவாரியின் பிரம்மாண்ட படைப்பான 'ராமாயணா' திரைப்படத்திற்கு முன்னணி சினிமா வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் முழு மதிப்பெண்ணான 5 நட்சத்திரங்களை வழங்கி பிரமிப்புடன் விமர்சித்துள்ளார். தனது விமர்சனத்தில், இந்தியத் திரையில் இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும், ஆன்மீகமும் உணர்வுகளும் ததும்பும் அழகும் இப்படத்தில் ஒருங்கே அமைந்துள்ளன என்று பாராட்டியுள்ளார். ரன்பீர் கபூரின் தெய்வீகமான கம்பீரம், சாய் பல்லவியின் பாசமிகு நடிப்பு, யாஷின் மிரட்டலான ராவணன் தோற்றம் ஆகியவை பன்னாட்டுத் திரைப்படங்களுக்கு இணையாக மிளிர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். திரைக் கதையும் காட்சி அமைப்புகளும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளன. மேலும் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மரின் பின்னணி இசை மற்றும் டிஎன்இஜி நிறுவனத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைப்பதாகத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நவம்பர் 5 அன்று இப்படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது.
· Ursvamsishekar