மதுரை வெற்றி சினிமாஸில் ‘பத்தா’ படக்குழு: ஆர்ப்பரித்த மதுரை ரசிகர்கள்

மதுரை வெற்றி சினிமாஸில் ‘பத்தா’ படக்குழு: ஆர்ப்பரித்த மதுரை ரசிகர்கள்

மதுரை மக்களின் சினிமா கொண்டாட்டம் எப்போதும் தனித்துவமானது. அந்த வகையில் மதுரையின் பிரபல வெற்றி சினிமாஸ் திரையரங்கிற்கு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படக் குழுவினர் வருகை தந்தபோது திரையரங்கமே அதிரும் வகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. படக்குழுவினரை நேரில் பார்த்த ரசிகர்கள் கரவொலி எழுப்பியும் விசிலடித்தும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்ட காட்சிகளை கேயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ‘பிளாக்பஸ்டர் பத்தா’ என்று குறிப்பிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் ‘பத்தா’ திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவு கூடிக்கொண்டே செல்வதால் கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்