விக்ரம் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்ட ராம் சரண்: கமல் ஹாசன் படக்குழு நெகிழ்ச்சி நன்றி!

விக்ரம் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்ட ராம் சரண்: கமல் ஹாசன் படக்குழு நெகிழ்ச்சி நன்றி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை மெகா பவர் ஸ்டார் ராம் சரண் வெளியிட்டார். இதற்கு படக்குழுவினரும் ஆந்திரா விநியோகஸ்தரான ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனமும் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி பல லட்சம் பார்வைகளைக் கடந்தது. விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மற்றும் அனிருத்தின் மிரட்டலான இசை தெலுங்கு சினிமா ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. ஜூன் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாகும் விக்ரம் திரைப்படத்திற்கு ராம் சரணின் இந்த ஆதரவு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு முன்னணி நட்சத்திரங்களின் பரஸ்பர சினிமா நட்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

· Sreshthmovies

பழைய செய்திகள்