'அசுரன்' புகழ் தீஜே அருணாசலம் இணையும் புதிய படம்: சாம் சி.எஸ் இசையில் இந்தியா பிலிம் கம்பெனி தயாரிப்பு!
தனுஷின் 'அசுரன்' படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தீஜே அருணாசலம் மற்றும் திவிஜா பிரபாகர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா பிலிம் கம்பெனி தனது முதல் தயாரிப்பாக (Production No. 01) களமிறக்கும் இந்த புதிய திரைப்பட அறிவிப்பை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை வாலி மோகன்தாஸ் இயக்குகிறார். மேலும் ஸ்ரீ சுமனோகரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராடிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ஆர்தர் ஏ. வில்சன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்திருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. புதிய கதைக்களத்துடன் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர்கள் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
· Actor Kayal Devaraj