டீஜே அருணாசலத்தின் புதிய சுயாதீனப் பாடல்: 'தேன் குடிக்க 404' மியூசிக் வீடியோ வெளியீடு!

டீஜே அருணாசலத்தின் புதிய சுயாதீனப் பாடல்: 'தேன் குடிக்க 404' மியூசிக் வீடியோ வெளியீடு!

'அசுரன்' புகழ் பாடகரும் நடிகருமான டீஜே அருணாசலம் நடிப்பிலும் குரலிலும் உருவாகியுள்ள 'தேன் குடிக்க 404' என்ற சுயாதீன இசை வீடியோ தற்போது இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. டி டைம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த மெலடி பாடலில் கீர்த்தனா விஜய் இணைந்து நடித்துள்ளார். துடிப்பான மேற்கத்திய மற்றும் மெல்லிசை கலவையில் உருவாகியுள்ள இப்பாடல், இளைஞர்களைக் கவரும் ரொமாண்டிக் அம்சங்களுடன் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக பல வெற்றிகரமான சுயாதீனப் பாடல்களை வழங்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள டீஜே அருணாசலம், இந்தப் பாடலிலும் தனது தனித்துவமான பாணியை வெளிப்படுத்தியுள்ளார். யூடியூபில் வெளியாகியுள்ள இந்த மியூசிக் வீடியோ தற்போது இசை ஆர்வலர்களால் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மாறுபட்ட சுயாதீன இசை முயற்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு இப்பாடல் ஒரு நல்ல இசை விருந்தாக அமைந்துள்ளதுடன், இணையத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்