20 லட்சம் பார்வைகளைக் கடந்து அதிரவைக்கும் 'டெக்சாஸ் டைகர்' படத்தின் புதிய பாடல்
இளம் நட்சத்திரங்கள் ரிது ஹாரூன் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி திரில்லர் திரைப்படம் 'டெக்சாஸ் டைகர்'. இயக்குநர் செல்வா கே. திரு இயக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'டைகரியன்ஸ் ரோர்' (Tigerians Roar) அண்மையில் அனைத்து முன்னணி ஆடியோ தளங்களிலும் வெளியானது. வெளியான குறுகிய காலத்திலேயே இப்பாடல் 20 லட்சத்திற்கும் (2M+) அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இளைஞர்களைக் கவரும் துள்ளலான இசை, அதிரடி வரிகள் மற்றும் கண்கவர் நடன அசைவுகள் இப்பாடலை சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவச் செய்துள்ளன. நடிகை ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் கதைக்களம் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பாடலின் தொடர் வரவேற்பைத் தொடர்ந்து படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்புத் தரப்பு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
· Propratheesh