டெக்சாஸ் டைகர் படத்தின் 'டைகரியன்ஸ் ரோர்' பாடல்: 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை!

டெக்சாஸ் டைகர் படத்தின் 'டைகரியன்ஸ் ரோர்' பாடல்: 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை!

ஹிரிது ஹாரூன் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'டெக்சாஸ் டைகர்' திரைப்படத்தின் அதிரடி பாடலான 'டைகரியன்ஸ் ரோர்' யூடியூபில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. செம்பான் வினோத், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஆண்டனி தாசன் மற்றும் யூகே ஸ்குவாட் இணைந்து துள்ளலான நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய இசைக்கலவையில் இப்பாடலைப் பாடியுள்ளனர். துடிப்பான ராப் வரிகளும் மாஸான இசையும் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. சோனி மியூசிக் சவுத் தளத்தில் வெளியான இப்பாடல் அனைத்து ஆடியோ தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது. வித்தியாசமான கிரைம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள டெக்சாஸ் டைகர் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டீசர் வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் இந்த அதிரடிப் பாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

· Idiamondbabu

பழைய செய்திகள்