சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் 'தாய்க்கிழவி': இந்தியன் பனோரமா 2026 பிரிவுக்கு தேர்வாகி பெருமை!
சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள 'தாய்க்கிழவி' திரைப்படம் கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் (IFFI) மதிப்புமிக்க இந்தியன் பனோரமா 2026 பிரிவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை படக்குழுவினர் பெருமையுடன் அறிவித்துள்ளனர். இயக்குனர் சிவக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். மண்ணின் மணமும் தாய்மையின் ஆழமும் கொண்ட எளிய மக்களின் வாழ்வியலை இப்படம் நெகிழ்ச்சியுடன் பேசுகிறது. சர்வதேச அளவில் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவின் சார்பாக 'தாய்க்கிழவி' திரையிடப்படுவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரமான கிராமியப் படைப்புகளை தொடர்ந்து ஆதரிக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்திற்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
· Actor Kayal Devaraj