தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்ட 'தாய்நிலம்': அக்டோபர் 9 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!
வாழ்க்கைப் போராட்டம், உயிர் பிழைத்தல் மற்றும் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஆழமான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'தாய்நிலம்' திரைப்படம் வரும் அக்டோபர் 9 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மனித உணர்வுகளின் ஆழத்தைப் பேசும் எதார்த்தமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஔசப்பச்சன் ஆன்மார்த்தமான இசையமைத்துள்ளார். டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில், பிரசாந்த் பிரணவம் மற்றும் அபிலாஷ் ஜி தேவன் கூட்டணியில் இந்த உணர்வுப்பூர்வமான திரைப்படம் பெரிய திரைக்கு வரவுள்ளது. வெளியாகி உள்ள சிறிய முன்னோட்ட காட்சிகள் பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும் விதமாக அமைந்துள்ளன. குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையிலான ஆழமான உணர்வுப்பூர்வ படைப்புகளுக்கு எப்போதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உண்டு. அந்த வகையில் அக்டோபர் 9 அன்று திரையரங்குகளில் வெளியாகும் 'தாய்நிலம்' திரைப்படம் தரமான கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல சினிமா அனுபவமாக அமையும் என்று சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
· @tamilcinexpress