தாயநிலம் திரைப்படம் வரும் அக்டோபர் 9 ரிலீஸ்: இன்னும் நான்கு நாட்களே உள்ளதாக அறிவிப்பு!
மண்ணின் மணமும் வாழ்வியல் யதார்த்தமும் நிறைந்த 'தாயநிலம்' திரைப்படம் வரும் அக்டோபர் 9 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பினை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர் அவுஸேப்பச்சன் இசையமைத்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடலாசிரியர்களான கவிஞர் தாமரை மற்றும் பழனிபாரதி ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளது இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் சிறந்த உள்ளடக்கத்தை முன்வைக்கும் படைப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உணர்ச்சிபூர்வமான கதைக்களத்துடன் திரைக்கு வரவுள்ள தாயநிலம் திரைப்படத்தைக் காண சினிமா ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj