தலைவர் 167 படத்தின் தலைப்பு 'தர்பார்': கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தலைவர் 167 படத்தின் தலைப்பு 'தர்பார்': கம்பீரமான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 167-வது திரைப்படத்தின் தலைப்பு 'தர்பார்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதன் முதல் பார்வையும் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கம்பீரமான போலீஸ் அதிகாரியாக களம் இறங்குகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். காவல்துறை சீருடையும், ரௌத்திரமான பார்வையும் கொண்ட ரஜினியின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் முதல்முறையாக உருவாகும் இந்த அதிரடிப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.

· Lyca Productions

பழைய செய்திகள்