மாஸ் காட்டும் தளபதி 64: ஆந்திரா உரிமம் விற்றுத் தீர்ந்தது, இன்று மாலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'தளபதி 64' திரைப்படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில திரையரங்கு உரிமங்கள் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளன. அத்துடன் புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடம் வானளவுக்கு உயர்ந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் விஜய்க்கு உள்ள மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தின் காரணமாக, ஆந்திரா மற்றும் தெலங்கானா விநியோக உரிமத்திற்கு கடும் போட்டி நிலவிய சூழலில் முன்னணி விநியோகஸ்தர் ஒருவர் உரிமத்தைக் கைப்பற்றியுள்ளார். இன்று மாலை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Only Kollywood