பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64'!

பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64'!

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'தளபதி 64' திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே பூஜையுடன் தொடங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'மாநகரம்' மற்றும் 'கைதி' படங்களின் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், சாந்தனு பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பையும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியையும் கவனிக்கின்றனர். கோலிவுட்டின் இரண்டு முன்னணி நட்சத்திர நாயகர்கள் திரையில் மோதிக்கொள்ளும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம், 2020 கோடை விடுமுறையைக் குறிவைத்து பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படக்குழுவினர் அனைவரும் பூஜையில் கலந்துகொண்ட உற்சாகமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

· Philoedit

பழைய செய்திகள்