தளபதி 68 படத்தின் பிரம்மாண்ட பூஜை வீடியோ வெளியீடு: நட்சத்திர பட்டாளத்துடன் ஏஜிஎஸ் அறிவிப்பு!

தளபதி 68 படத்தின் பிரம்மாண்ட பூஜை வீடியோ வெளியீடு: நட்சத்திர பட்டாளத்துடன் ஏஜிஎஸ் அறிவிப்பு!

விஜயதசமி திருநாளை முன்னிட்டு நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் படப்பூஜை வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார். இந்த பூஜை வீடியோவில் டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு என தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை அரங்கில் அனைத்து கலைஞர்களும் உற்சாகமாக உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபுவின் இயக்கம் மற்றும் விஜய்யின் நடிப்பு இணையும் இந்த கமர்ஷியல் படம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· AGS Entertainment

பழைய செய்திகள்