தளபதி 69 படப்பிடிப்பு 69 சதவீதம் நிறைவு: ஜனவரி 26-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு என அறிவிப்பு!
தளபதி விஜய் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் 'தளபதி 69' திரைப்படத்தின் படப்பிடிப்பு 69 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் உற்சாகமான அப்டேட்டைத் தந்துள்ளது. அனிருத் இசையமைப்பில் விஜய், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, நரேன், கௌதம் மேனன், மமிதா பைஜூ என இந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையின் இறுதித் திரைப்படமாக இது அமைவதால், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் காண வினாடிகளை எண்ணி மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் ஆரம்பக்கட்ட அறிவிப்பு முதலே ரசிகர்கள் மத்தியில் உருவான ஆர்வம், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் மேலும் அதிகரித்துள்ளது.
· Itsnarain