ஏப்ரல் 13-ல் பீஸ்ட் வேட்டை ஆரம்பம்: ரிலீஸ் தேதியை உறுதி செய்த புதிய போஸ்டர்!

ஏப்ரல் 13-ல் பீஸ்ட் வேட்டை ஆரம்பம்: ரிலீஸ் தேதியை உறுதி செய்த புதிய போஸ்டர்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படமான 'பீஸ்ட்', வரும் ஏப்ரல் 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னா மாஸான புதிய போஸ்டரைப் பகிர்ந்து இந்த ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையில் வெளியான அரபிக் கூத்து பாடல் இணையத்தில் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி சாதனை படைத்த நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள டிரெய்லரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். துப்பாக்கியுடன் விஜய் நிற்கும் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு களமிறங்கும் பீஸ்ட் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஓபனிங் வசூலைப் பெறும் என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர்.

· Gopiprasannaa

பழைய செய்திகள்