தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரலில் ரிலீஸ்: புத்தாண்டு போஸ்டருடன் அனிருத் வாழ்த்து!
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்பதை இசையமைப்பாளர் அனிருத் புத்தாண்டு போஸ்டருடன் உறுதிப்படுத்தியுள்ளார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இது பீஸ்ட் மோட் என பதிவிட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் மாஸ்டர்கள் அதிரடி சண்டைப்பயிற்சியை அமைத்துள்ளனர். அனிருத் இசையில் படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏப்ரல் மாத வெளியீடாக திரைக்கு வரவுள்ள பீஸ்ட் திரைப்படம் கோடை விடுமுறையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சினிமா விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Anirudhofficial